உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த நிதி ஒரு தடையல்ல.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து நாடாளுமன்ற விசேட செயற்குழு அவதானம் செலுத்தி, தாமதமின்றி தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனநாயகத்தின் பிரதான அங்கமாகவே தேர்தல்கள் காணப்படுகின்றன. மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்பட்ட சட்டச் சிக்கல்களினால் பல ஆண்டுகளாகத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்தும் காலம் தாழ்த்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இந்தச் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு தேர்தலை நடத்துவதற்குப் கடந்த அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தேர்தலை நடத்தும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கு ஆணைக்குழுவின் சார்பில் நாம் பல ஆக்கபூர்வமான யோசனைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்று தற்போது இயங்கி வருகின்றது. இக்குழு தனது முதலாவது கூட்டத்தை நடத்தியதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, குறித்த செயற்குழு தாமதமின்றித் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்து ஒரு தெளிவான தீர்வு எட்டப்பட்டால், நியாயமானதும் சுதந்திரமானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எம்மால் முடியும்.

தேர்தலை நடத்துவதற்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. ஏனெனில், நடப்பு வரவு – செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்காகத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0