பொதுமக்கள் பாதுகாப்புக் குழு மற்றும் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள்.!
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தினால் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக் குழு மற்றும் ஆலோசனைகுழு கூட்டங்கள் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. Sujith Wedamulla அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. தயாரத்ன, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் திரு பீரிஸ் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, மதத்தலைவர்கள், பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச செயலாளர், கல்வி வலய பணிப்பாளர், அரச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் பேர் கலந்து கொண்டனர்.


