உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தேசிய ஒருமைப்பாட்டுக்கு தன்னாட்சி அதிகாரமே வழி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படுவதே நிலையான தீர்வாக அமையும் என்று புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் மத்திய குழுவின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மார்க்சிச லெனினிசக் கொள்கைகளில் உறுதியாக நின்று செயற்படும் எமது கட்சி, எக்காலத்திலும் சந்தர்ப்பவாத அரசியலை ஏற்றுக்கொண்டதில்லை. இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழலில் ஏகாதிபத்திய மற்றும் நவகாலனித்துவக் கட்டுப்பாடுகளே நாட்டின் முன்னேற்றத்திற்குப் பிரதான முட்டுக்கட்டைகளாக உள்ளன. அத்துடன், சாதியக் கட்டமைப்பு மற்றும் மதவாத அரசியல் செல்வாக்கு போன்ற நிலப்பிரபுத்துவ மிச்சங்கள் இன்றும் சமூக ஒடுக்குமுறைக்குக் காரணமாக அமைகின்றன. இவற்றுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இலங்கையை நான்கு தேசிய இனங்களையும் ஏனைய சிறுபான்மைக் குழுக்களையும் கொண்ட ஒரு பல்லின நாடாக அங்கீகரிக்கத் தவறுவதே இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய தடையாகும். சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதிகள் இருதரப்பினருமே இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, தன்னாட்சி அதிகாரங்களை வழங்குவதன் மூலமே நாட்டில் உண்மையான தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும். இந்தப் போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் இணைந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0