உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கடந்த 9 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை உரிமை மறுப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளமை அநீதியான செயலாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். கடந்த 9 ஆண்டுகளாக இந்நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமையை நாம் வழங்கவில்லை. இது மிகவும் அநீதியான செயலாகும்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கான ஆட்சி அதிகாரத்தைக் கோரி நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். அந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும்.

மாகாண சபைகள் இயங்காமல் அரச இயந்திரம் சரியாகச் செயற்பட முடியாது. அரச நிர்வாகக் கட்டமைப்பு முறையாக இயங்காத காரணத்தால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். எனவே, மக்களின் இந்த உரிமையை உடனடியாக வழங்க வேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற சபை முதல்வர் மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் அனைவரும் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கருத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்துத் தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தச் செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், கடந்த தேர்தல்களின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும். இதனை நிச்சயமாக ஒழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் அவரைச் சந்தித்த போதும் அவர் இதனை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும்…

48 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

55 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

40 0 0