உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சஜித் எதிர்க்கட்சியின் கௌரவத்தை சீர்குலைக்கின்றார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் அவரது அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக மாறியுள்ளன என்று நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் தொடர்பில் ஆற்றிய உரை, தற்போது மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவையாகப் பார்க்கப்படுகின்றது. உலகில் போர் நிலவும் நாடுகள் கூட இக்கட்டான சூழல்களில் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. ஆனால், இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தேவையற்ற விடயங்களைப் பேசி வருகின்றார்.

சஜித் பிரேமதாஸவின் பெயரைக் குறிப்பிட்டு, சிறிய குழந்தைகள் கூட கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றன. அவரது இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்கட்சியின் நற்பெயருக்கே பெரும் களங்கம் விளைவிப்பதாக, அந்த அணியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களே கவலை வெளியிட்டு வருகின்றனர்.

நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய பெறுமதியான நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கள் ஒரு நகைப்புக்குரிய விடயமாக மாறியுள்ளது கவலைக்குரியது.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அணுகுமுறை குறித்து நாட்டு மக்களே வரும் காலங்களில் சரியான முடிவை எடுப்பார்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0