உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கோட்டாபயவை உருவாக்கிய நரிகள் இன்று எம்மைக் குற்றம் சொல்கின்றன.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்” என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“ராஜபக்ஷ முகாமிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை உருவாக்கி, அவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டபோது எதிர்க்கட்சிக்கு வந்து அவர்களுக்கு எதிராகவே கூச்சலிட்ட நரிகள்தான் இன்று எமது எதிர்க்கட்சியைக் குற்றம் சொல்ல எத்தனிக்கின்றனர். விமல் வீரவன்ச போன்ற அந்த போலித் தலைவர்களை நாட்டு மக்கள் ஏற்கனவே ஒதுக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். எனவே, எதிர்க்கட்சியின் பொறுப்பை நாங்கள் முறையாக நிறைவேற்றுவோம்.

எமக்கு ஒரு சிறந்த எதிர்க்கட்சியும், பலமான எதிர்க்கட்சித் தலைவரும் உள்ளனர். கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில், இந்த அரசில் உள்ள எவராலும் எமது எதிர்க்கட்சியில் ஒரு திருடன், ஊழல்வாதி அல்லது மோசடிக்காரன் இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை. அந்தளவுக்கு நாம் தூய்மையான அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.

அநுரகுமார திஸாநாயக்க அல்லது ஜே.வி.பி. செய்ததைப் போல், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தைச் சிதைத்து, அதன் மூலம் எழும் மக்களின் போராட்டங்களைப் பயன்படுத்தி, வீடுகளுக்குத் தீ வைத்து, மனிதர்களைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

ஒன்றிணைந்து அரசைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தைத் தயாரியுங்கள். அதை விடுத்துக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்காதீர்கள் என விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.” – என்று சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0