உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சுரேஷ் சலே கைதுக்கு கூட்டு எதிரணி கடும் கண்டனம்; கையொப்பம் திரட்டும் போராட்டம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்குக் கூட்டு எதிரணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் மக்கள் மனுப் போராட்டமும் நேற்று சனிக்கிழமை மஹரகமவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹரகம நகர சபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இதன்போது உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டைப் பாதுகாத்த புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தக் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0