உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

13 ஐ வழங்கியவர்கள் நாங்கள் தான் எதிர்த்த ஜே.வி.பியை தமிழ் மக்கள் ஆதரித்தது தவறு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

13 ஆம் திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வருவதற்கு பாடுபட்டவர்கள் எமது அணியைச் சார்ந்தவர்கள் அதனை வழங்க விடாது எதிர்த்து கூச்சலிட்ட தரப்பான ஜே.வி.பியை தமிழ் மக்கள் வடக்கில் ஆதரித்தது கவலையான விடயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார யாழில் தெரிவித்தார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாஸவின் கொள்கை எப்போதும் தேசிய ஒற்றுமையை பற்றியது அவர் வடக்கிற்கும் தெற்கிற்கும் காத்திரமான பங்களிப்புகளை வழங்கினார்.

வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கில் பல வீடுகளை கட்டியதை நான் நினைவு கூற விரும்புவதோடு அவரது தந்தையும் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடக்கு, கிழக்கில் பல வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கு காரணமாக இருந்தார்.

தற்போது ஆட்சியில் உள்ள ஜே.வி.பி என்கின்ற தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களிடம் பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகிறது.

வடக்கில் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். நிலங்களை விடுவிப்போம், அரசியல் கைதிகளை விடுவிப்போம். அதேபோல் தெற்கு மக்களுக்கும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள் ஆனால் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

பிணை முறி மோசடியாளர்களை கைது செய்வோம் என்றார்கள் அவர்களால் சொன்னதை செய்ய முடியவில்லை ஆனால் அதைவிட பாரிய மோசடியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளது.

மேலும், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சுமார் 320 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விரைவாக விடுவிக்கப்பட்டமை அதில் என்ன பொருட்கள் இருந்தது என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகிறது.

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தொடர்ச்சியாக தமது ஆதரவை வழங்கி வந்தவர்கள் அதை நாம் மறக்க மாட்டோம்.

ஆகவே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிளவுக்கு காரணமான ஜே.வி.பி என்கின்ற தற்போது தேசிய மக்கள் சக்தியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திப்பவர்களை தமிழ் மக்கள் இனியும் நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ். மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் அனோஜன் மற்றும் தொகுதி அமைப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0