உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இலங்கை சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இலங்கையின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30 சதவீதமாகும் என்ற போதிலும், சுகாதார சேவைக்குத் தேவையான செவிலியர்களின் எண்ணிக்கை இதுவரை முழுமையடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு அமைய, சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு நாட்டுக்கு இன்னும் பெருமளவிலான செவிலியர்கள் தேவைப்படுவதாகவும், செவிலியர் சேவைக்கான ஆட்சேர்ப்பின் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும் நோக்கில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

இன்று மாணவ செவிலியர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட இந்தப் பிரிவினர் சேவையில் இணையும் போது, நாட்டின் சுகாதார சேவையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0