உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சித்தங்கேணி சிறிகணேசா வித்தாயாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சித்தங்கேணி சிறிகணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி நேற்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டதுடன் இறை வணக்கமும் இடம்பெற்றது.


பின்னர் தேசியக் கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டதுடன் ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் விளையாட்டுப் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் அணிநடை மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்வுநிகழ்வு நிறைவடைந்தது.பாடசாலை அதிபர் கலைவாணி அருள்மாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் யமுனா இராஜசீலன், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் செல்வராணி டினேஸ் மற்றும் கௌரவ விருந்தினராக பாடசாலை நலன்விரும்பி கங்காதரன் ஜனகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்! – தாயகச் செயலணி அழைப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு…

30 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

39 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

64 0 0