உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: நேற்று 968 பேர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புகள் நடைபெற்றது. இதில் 968 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 1,015 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேருக்கு தடுப்புக்காவல் உத்தரவு, நால்வர் மீது சட்டவிரோத சொத்துக்களை தொடர்புடைய விசாரணைகள், மற்றும் ஒன்பது பேர் மேலதிக புனர்வாழ்வுக்காக அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் ஹெரோயின் 453 கிராம், ஐஸ் 656 கிராம், கஞ்சா 903 கிராம், 4,314 கஞ்சா செடிகள், குஷ் ரக 5 கிராம், ஹஷீஷ் ரக 28 கிராம், போதை மாத்திரைகள் 431, மதனமோதகம் 313 கிராம் மற்றும் மாவா 753 கிராம் ஆகியவை உள்ளடங்கும்.பொலிஸார் தெரிவித்ததாவது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை இலக்கு வைத்து இந்த தேசிய திட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பலப்படுத்தப்படும்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

26 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0