ஒட்டுசுட்டான் ஒருங்கினைந்த கூட்டுறவு பண்ணையில் விதை சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஒருங்கினைந்த பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்ட ரூ. 8 மில்லியன் அபிவிருத்தி நன்கொடை மூலம் விதை சுத்திகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரம் இன்று தொடங்கப்பட்டது.
இந்த புதிய வசதியால் ஒட்டுசுட்டான் விவசாயிகள் அவர்களது விதை நெல் உற்பத்தியை சுத்தப்படுத்தி, தரம் பூர்த்தியாக்கி, நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளும் வசதி உருவாகும்.
ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் இ. சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற விழாவை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வைபவ ரீதியாகத் தொடங்கி வைத்தார்.நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிகாரி அ. உமாககேஸ்வரன், கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர் வி. யேந்தன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ. நிசாந்தன், கூட்டுறவு ஆணையாளர் செ. அகள்யா, மாவட்ட கூட்டுறவுசபை செயலாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.