உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

காத்தான்குடி கடற்கரையில் மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. அழககோன் தெரிவித்துள்ளார்.நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இப்பொருள் நார்சேர்க்கை பொருளால் செய்யப்பட்டதாகக் காணப்படுகிறது.
கப்பல் தரைதட்டும் போது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் தடுப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இது இருக்கக்கூடும் என ஆரம்ப கட்டத்தில் கருதப்படுகிறது.

இம்மர்மப் பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.கரையொதுங்கியுள்ள இப்பொருள் தற்போது காத்தான்குடி கடற்கரையில் காணப்படுவதுடன், அதைப் பார்வையிட பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 27 ஆம் திகதி மாலை 3 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.…

45 0 0
இலங்கை செய்திகள்

விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

59 0 0