உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

கல்முனையில் 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கல்முனை – கடந்த வியாழக்கிழமை (12) இரவு, மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் இருந்து அம்பாறை மாவட்ட நிந்தவூர் பகுதிக்குச் செல்லும் போது, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவின் புறநகர் பகுதியில் 24 மாடுகளுடன் கனரக வாகனம் கைப்பற்றப்பட்டது.


இந்த சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, வாகனத்தில் இடவசதிக்கு மேல் மாடுகள் நெருக்கி ஏற்றப்பட்டதாகவும், உரிய அனுமதி இருந்த போதிலும் அதே விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


வெள்ளிக்கிழமை (13) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிமன்றம், 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனத்தை பிணையில் செல்ல அனுமதித்தது மற்றும் வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி மறு தவணைக்காக ஒத்திவைத்தது.


மேலும், கைப்பற்றப்பட்ட மாடுகள் அடங்கிய வாகனம் கல்முனை தலைமையக பொலிஸில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில், இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடுகள், கல்முனை மாநகர சபையின் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அருகில் புதைக்கப்பட்டுள்ளன.


இந்த சோதனை நடவடிக்கை, கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வருண் ஜயசுந்தர மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ்மா அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் அறிவுறுத்தலின்படி, கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0