உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஜனாதிபதி செயலகத்தில் விசேட இப்தார் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

முஸ்லிம்களின் ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் இப்தார் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகமும் ஜனாதிபதி செயலக நலன்புரி சங்கமும் இணைந்து இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்தன.ரமழான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து எம்.எஃப்.ஏ. நுஃபைல் மௌலவி சிறப்புரை ஆற்றினார்.

அல் ஹாபிழ் ஏ.என். உபைதுல்லாஹ்வின் சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 க்கு இப்தார் நிகழ்வு தொடங்கியதுடன், அதைத் தொடர்ந்து இரவு உணவும் பரிமாறப்பட்டன மேலும், இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜனாதிபதி செயலகம் இந்நாட்டின் அரச துறையில் முக்கிய இடமாகும் என்றும், இப்தார் நிகழ்வை முன்னிட்டு முழு முஸ்லிம் சமூகத்திற்கும் ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழியர்களின் சார்பாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

பல்லின மக்கள் வாழும் நாடாக, நாம் ஒருவருக்கொருவர் கலாசாரங்களை மதித்து ஒருங்கிணைந்து செயற்படுகிறோம் என்றும், ரமழான் கொண்டாட்டத்தை இலங்கை மக்களின் தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் தனித்துவமான கொண்டாட்டமாக விவரிக்கலாம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான பிரசன்ன சந்தித், ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் உதவி செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலக நலன்புரி சங்கத்தின் செயலாளர் சமித் தலகிரியவ, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர்கள், பணிப்பாளர்கள் , பிரிவுத் தலைவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0