உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

குருநாகல் – தம்புள்ளை வீதியில் விபத்து: இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொக்கரல்ல பகுதியில் நேற்று (13) நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பிக்கப் வாகனமும், எதிரே வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்தின் போது பிக்கப் வாகனத்தில் பயணித்த 13 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்தச் சிறுமியின் தாயார் மற்றும் மாமா ஆகியோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


காயமடைந்தவர்கள் முதலில்அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0