உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

நாட்டின் கடுமையான வெப்பசூழல் பதிவாகி வரும் நிலையில் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் .நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்.

மழையால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டில் கடந்த சில நாள்களாக வெப்பம் கோர தாண்டவமாடியதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்துள்ளனர். இந்த நிலையில் மழை கிடைத்தால் வெப்பத்திலிருந்து சற்று தணியலாம் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0