ஈரானிய மாலுமிகளின் உடல்களுடன் புறப்பட்ட விசேட விமானம்.!
சர்வதேச கடலில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் ஒன்று நேற்று (13) இரவு ஈரான் நோக்கிப் புறப்பட்டது.ரானிய ஏர்பஸ்–340 ரக விசேட விமானம் நேற்று இரவு 9.29 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விமானம் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படை கப்பலான IRIS Lavan இல் இருந்த 183 ஈரானிய மாலுமிகளையும் ஏற்றிக்கொண்டு பின்னர் ஈரான் நோக்கிச் செல்லவுள்ளது.
இதேவேளை, குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த 84 பேரின் உடல்களை ஒரே தடவையில் கொண்டு செல்ல இயலாத காரணத்தால், முதல் கட்டமாக 45 உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
கடந்த மார்ச் 4ஆம் திகதி சர்வதேச கடற்பரப்பில் நின்றிருந்த ஈரான்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 84 மாலுமிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.