கொக்குவில் இந்துக் கல்லூரி விளையாட்டு நிகழ்வில் மாணவன் தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி.!
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (13) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவரை மைதானத்திற்குள் நுழைந்த குழுவொன்று பலர் முன்னிலையில் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் மாணவன் தலையில் காயமடைந்ததையடுத்து உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.