உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பொருளாதார நிலைமையை பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு நேற்று (13) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கூடினது.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் உருவான சிக்கல்கள் ஆகியவை இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், நாட்டின் சந்தை நிலைமையை நிலைப்படுத்துதல் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும், முந்தைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்களும் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டன.


இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும் தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

55 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0