உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வியாபாரியின் முகத்தில் திரவம் தெளித்து மாணிக்கங்கள் கொள்ளை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கண்டியில் உள்ள ஈ.எல். சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள மாணிக்கக்கல் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் மற்றும் மாணிக்கங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சுமார் 10.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணிக்கக்கல் வாங்குவதாக கூறி ஒருவர் அந்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்தார். பின்னர் அவர் வர்த்தகரின் முகத்தில் திரவமொன்றை தெளித்துவிட்டு, சுமார் 60 இலட்சம் ரூபா மதிப்பிலான மாணிக்கங்கள் அடங்கிய பெட்டியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், அதிர்ச்சிதரும் கொள்ளைச் சம்பவம் கண்காணிப்பு கருவிகளில் பதிவாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

54 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0