உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

அஸ்வெசுமவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசுமவின் முதல் கட்டத்தின் கீழ், சலுகைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் 2023/2024 ஆண்டுகளில் விண்ணப்பிக்காத அனைவரின் தகவல்களையும் புதுப்பிக்கும் பணியை நலன்புரி நன்மைகள் சபை ஏற்கனவே தொடங்கியுள்ளது.இந்தச் செயல்முறைக்காக தகுதியான 2,993,558 நபர்கள் ஏற்கனவே தங்கள் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களின் தகவல்களைச் சரிபார்க்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி முடிவடைய உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஒருவர் தவறான தகவல்களை வழங்கினால், அது நலன்புரிப் நன்மைகள் சட்டத்தின் பிரிவு 20 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அத்தகைய சந்தர்ப்பத்தில் நீதிவான் முன்னிலையில், குற்றவாளியாகும் ஒருவருக்கு 5000 ரூபாய்க்கும் அதிகரிக்காத அபராதமோ அல்லது ஒரு வருடகால சிறை தண்டனையோ வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

54 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0