மின்சார தொழிற்சங்கங்களுடன் அரசு இணக்கம்.!
மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வுகளை வழங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் தமது சங்கங்களுக்கு இல்லை என்றும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தங்களது முக்கிய குறிக்கோள் என்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.இதற்கிடையில், புதிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினருடன் ஜனாதிபதி இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பில் மின்சார தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் கூறினர்.மேலும், புதிய நிறுவனங்களுக்கு வெளியிலிருந்து இணைக்கப்படவிருந்த மின்சார அதிகாரிகள் மற்றும் மின்சார பொறியியலாளர்கள் நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.