உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சாவகச்சேரி நகர சபை விவகாரம்: எழுத்து மூல சமர்ப்பணம் கேட்டு உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

சாவகச்சேரி நகர சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.


இன்றைய விசாரணையில், இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவரான உப தவிசாளர் ஞா. கிஷோர் சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகி வாதாடினார்.கடந்த ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில், 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய கட்டடங்களுக்கு தகுதிச் சான்றிதழ் கோருவது குறித்து உப தவிசாளர் விமர்சித்திருந்தார்.

இந்த உரை உள்ளூராட்சி ஆணையாளரின்அறிவுறுத்தலை மீறியது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மையமாகக் கொண்டு இன்றைய வாதங்கள் நடைபெற்றன.உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார வரம்புக்குட்பட்ட விடயங்கள் குறித்து பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு உரிமை உண்டு என சட்டத்தரணி குருபரன் வாதிட்டார். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு பேசுவது ஒரு உறுப்பினரின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், உப தவிசாளர் எந்த அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசையில் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே அவர் கருத்து வெளியிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.தவிசாளர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சட்டத்தரணி, உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.


மேலும், நகர சபை நிர்வாகத்தை நீக்கும் முயற்சிகளுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார்.இந்நிலையில், அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் விசாரணை அதிகாரி க. அரியநாயகம் தனது இறுதி அறிக்கையை வட மாகாண ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

54 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0