உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள 120 குடும்பங்களுக்கு 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் பெற்று கொடுக்கும் முகமாக நேற்று 12 ஆம் திகதி மதியம் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

தலா ஒரு குடியிருப்புக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் தேசிய நீர் வழங்கல் திணைக்களம் ஊடாக நேற்று ஆரம்பிக்கப்பட்டு இதற்கான சுத்தமான குடிநீர் கிளன்டில் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கியில் இருந்து நீரை நீர் இறைக்கும் இயந்திரம் ஊடாக குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்து குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் நீர்த் தாங்கி அமைக்கப்பட்டு அந்த நீர்த்தாங்கியில் இருந்து நீரை வழங்கும் திட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த வேலைத்திட்டம் 2015 ஆம் ஆண்டு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான நீர்க் குழாய்கள் இப் பிரதேசத்திற்கு கொண்டு வந்த போதும் தேசிய நீர் வழங்கல் திணைக்களம் இடை நடுவில் இந்த வேலைதிட்டத்தை கைவிட்டது.

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் வழங்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

54 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0