பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
தங்கல்லை – ரன்ன வீதியின் நெடொல்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) பகல் பேருந்து மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் நெடொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தங்கல்லையிலிருந்து ரன்ன நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிய பின்னர், பேருந்து மீண்டும் பயணத்தை ஆரம்பித்த வேளையில், வீதியை கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.