உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

தாக்குதலில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திக்வெல்ல – ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0