உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்; வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களை சுருக்கி விடாதீர்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் தூதுவர் இசொமடா அகியோ மற்றும் ஜப்பானிய உயர்மட்டக் குழுவினரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் போது மனோ கணேசன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு,

பொருளாதாரச் சவால்கள் மற்றும் நேரடி உதவி
“இலங்கையில் வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக – பொருளாதார சவால்கள் குறித்து ஜப்பான் இனிவரும் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தோட்டப்பகுதிகளில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடிப் பயன் அளிக்கக்கூடிய உதவித் திட்டங்களை வழங்க முன்வாருங்கள்.”

தேசிய இனமாக அங்கீகரித்தல்
“எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாளங்காணுங்கள். நாம் பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். தற்போதைய அரசு எமது பிரச்சினைகள் குறித்து நிறையப் பேசினாலும், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.”

நட்புறவு நாடாக ஜப்பானின் கடமை
“இலங்கைக்கு வரலாற்று ரீதியாக அதிகளவு உதவி வரும் நட்பு நாடான ஜப்பான், தனது உதவிகள் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகமான மலையகத் தமிழ் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மனோ கணேசன் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களான வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி மற்றும் பிரஜீவன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0