உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

நாளை வடக்கு மாகாண அலுவலகப் பணியாளர் போட்டிப் பரீட்சை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2025 (2026), நாளை சனிக்கிழமை வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு விண்ணப்பித்து, இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், இன்று வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அலுவலக நேரத்தில் 021 221 9939 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0