உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

செம்மணி மனிதப் புதைகுழி; ஏப்ரலில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

விசாரணையின் போது மன்று வழங்கிய முக்கிய உத்தரவுகள் வருமாறு,

துப்பரவுப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு
புதைகுழியைச் சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு செய்ய வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டது.

அத்துடன், ‘டித்வா’ புயல் மற்றும் பருவ மழையினால் சேதமடைந்துள்ள தற்காலிகக் கொட்டகைகளை அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளைச் செய்து கொடுக்கவும் பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டது.

கள தரிசிப்பு மற்றும் நீர் வெளியேற்றம்
வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரனித்தா மற்றும் நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் ஆகியோர் புதைகுழி பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர்.

தற்போது புதைகுழிக்குள் நீர் தேங்கி நிற்பதனால், எதிர்வரும் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த விசாரணையும் அகழ்வுப் பணிகளும்
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல்…

44 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

45 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

52 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

54 0 0