உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வாகனம் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனம் மோதியதில், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது மாணவன் ஒருவன் இன்று வியாழக்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையின் பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதன்போது, வாகனத்தின் ஹேண்ட்பிரேக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து சென்று, பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீது மோதியுள்ளது.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய மாணவன் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வாகனத்தின் உரிமையாளரான பணிப்பாளர், தான் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்ற பின்னரே இந்த விபத்து எதிர்பாராத விதமாக இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

மதுபான கடத்தல்காரரின் உதவியாளர்கள் சிக்கினர்.!

வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை பொலிஸாரால் எவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற முடிகிறது?

மௌனம் மற்றும் அக்கறையீனத்தின் ஊடாக தமது வலியை அவமதித்தமைக்காக ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் எதிராகக் குரலெழுப்புவதற்கும், கோபம் கொள்வதற்குமான உரிமை மக்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளைப் பறித்துக்கொண்டதன்…

61 0 0
இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

36 0 0