உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய புரட்சி – யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமை .!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆற்றல்மிக்க இடங்களை அடையாளம் கண்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 2026 – 2028 காலப்பகுதிக்கான விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், பேண்தகு சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சுமார் 2,667.03 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும், பிராந்திய உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலா உட்கட்டமைப்புகளைமேம்படுத்துவதற்காக 131.02 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த யாழ்ப்பாண அபிவிருத்தித் திட்டம் 2026 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0