உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஒரே நாளில் போதைப்பொருட்களுடன் 925 பேர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 925 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 927 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 10 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, ஒரு கிலோகிராம் 107 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 994 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 163 கிராம் கஞ்சா, 55 ஆயிரத்து 229 கஞ்சா செடிகள், 57 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 76 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 997 போதை மாத்திரைகள், 137 கிராம் மதனமோதகம் மற்றும் 320 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0