உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இரத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இம்முறை மே முதலாம் திகதி மே தினக் கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்தப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மே தினக் கூட்டத்தை இரத்துச் செய்தமைக்கான காரணத்தை விளக்கிய அவர், மேலும் கூறுகையில்,
“இம்முறை மே மாதம் முதலாம் திகதி புனித பூரணை தினமாக அமைவதால், அன்றைய நாளில் அரசியல் கூட்டங்கள் அல்லது பேரணிகளை முன்னெடுக்கப்போவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மே முதலாம் திகதி நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டாலும், மக்கள் கூட்டம் மற்றும் பேரணிகள் பிறிதொரு நாளில் பிரம்மாண்டமாக நடத்தப்படும்.” – என்றார்.

மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்குவதாக எழுந்துள்ள விமர்சனங்களை அவர் முற்றாக நிராகரித்தார்.

“எமக்கு மக்கள் பலம் இல்லை என எவரும் நினைக்க வேண்டாம். எமக்கு இன்னும் மக்கள் ஆதரவு பலமாகவே உள்ளது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தற்போதைய அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் பலம் யாருக்கு உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வரும்.” – என்று சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இந்தத் தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0