உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (09) சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எஸ். பிரிமியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவ நிலையத்தின் உட்கட்டுமான அபிவிருத்திகளை விரிவாக்கம் செய்வது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது, நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணியினை நாடாளுமன்ற உறுப்பினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தற்போதைய இடவசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு இன்னும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0