உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பண்டாரகம – கெஸ்பாவ வீதியில் நேற்று திங்கட்கிழமை (09) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிதெல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

கெஸ்பாவ நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, அருகிலிருந்த வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ – கெக்கிராவ வீதியில் 36ஆம் மைல்கல் தூணுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (09) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மஹஇலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கெக்கிராவ நோக்கி அதிவேகமாக பயணித்த உந்துருளி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0