உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

யாழில் 2025 இல் மட்டும் 62 கோடி ரூபாய் மோசடி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.” – இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜயமகா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் கடந்த வருடம் 225 மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக இடம்பெறும் மோசடிகள், இணையக் குற்றங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள், காணி மோசடிகள், ஒன்லைன் மோசடிகள் என்பனவே அவற்றில் கணிசமானவை.

இந்த மோசடிகள் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய மோசடிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் வேறு பகுதிகளைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு மோசடிகள் இடம்பெறுகின்றன.

வெளிநாட்டு வாழ்க்கையில் மக்களுக்கு இருக்கும் ஆசையை மோசடியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

25 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0