உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு; பிரதான சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில், கடந்த ஜனவரி 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் உடவளவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது, ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய, கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த 03ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

ஹட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை வேளையில் தலைநகர் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பாரவூர்தியும்…

27 0 0
இலங்கை செய்திகள்

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு.!

இஸ்லாத்தின் ஆசான், முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று 26 ஆம் திகதி நடைபெற்றது. இந்தப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் விற்பனை; அவசர எச்சரிக்கை.!

முகநூல் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும்…

48 0 0