உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

காணி முரண்பாடினால் நடந்த விபரீதம்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

எல்பிட்டிய, படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் காணி முரண்பாட்டினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மூத்த சகோதரர் தனது இளைய சகோதரரை கறுவாப் பொல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (26) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகிலேயே இருவரின் வீடுகளும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வந்து அளவீட்டுப் பணிகளை நிறைவு செய்து சென்றதன் பின்னர், காணி தொடர்பாக இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, உயிரிழந்த நபர் மீது கறுவாப் பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் தரையில் விழுந்துள்ளார்.


பின்னர் குடும்பத்தினர் அவரை உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 73 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைஎல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

53 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0