கம்பஹாவில் இரு பாரவூர்திகள் மோதி விபத்து.!
கம்பஹா – ஜா எல பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஜா எல நோக்கி பயணித்த பாரவூர்தியொன்று, எதிர்திசையில் வந்த மற்றொரு சிறிய பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் கடுமையாகக் காயமடைந்த சாரதி உடனடியாக கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் ஜா எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.