உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றி வருகிறார்.


தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி முதல் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி துணைவேந்தராகப் பதவியேற்க உள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை அழைத்திருந்தார்.

பின்னர் நடைபெற்றத் தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று பேராசிரியர் வேல்நம்பி முதன்மை நிலையைப் பெற்றிருந்தார்.
மேலும், கடந்த மூன்று தடவைகள் நடைபெற்ற துணைவேந்தர் தேர்தல்களிலும் அவர் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான நடைமுறையின்படி, பேரவையின் விசேடக் கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று பேரின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு வழியாக ஜனாதிபதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.


1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமிப்பார்.அந்த அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

53 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0