கல்முனை பிரதேச செயலகத்தில் வருடாந்த ஒன்று கூடலும் நோன்பு திறப்பு நிகழ்வும்.!
கல்முனை பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்று கூடலும் நோன்பு திறப்பு நிகழ்வும் புதன்கிழமை மாலை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி. எம். எம். அன்சார் தலைமையேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், பிரதேச செயலக கணக்காளர் எம். எஸ். அமீர் அலி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ. சி. எம். பளீல், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ. சி. அன்வர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே. எல். யாசீன் பாவா உள்ளிட்டோர் மற்றும் கிளைத் தலைவர்கள், பல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்களுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டு சென்றவர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.