உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்; சுரேஷ் சலேயின் டிஜிட்டல் தடயங்கள் சல்லடை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வங்கிக் கணக்குகளை விரிவாக ஆய்வு செய்யப் புலனாய்வாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று புதன்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டார்.

பேலியகொட பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குக் காலை 8.10 மணியளவில் அவர் பணிக்குச் சென்று கொண்டிருந்த போதே, விசேட அதிகாரிகள் குழுவினால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, சி.ஐ.டி. தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரத் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இத்தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா? தெரிந்திருந்தும் அவற்றை உரிய தரப்பினருக்கு அறிவிக்காமல் மறைத்தாரா? என்பது குறித்து அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் ‘சனல்-4’ ஆவணப்படத்தில் அஸாத் மௌலானா வெளியிட்ட பரபரப்புத் தகவல்களின் அடிப்படையில், ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கில் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுடன் இணைந்து சதித் திட்டங்கள் தீட்டப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே இத்தாக்குதல் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராகக் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டியினர் சமர்ப்பித்த இரகசிய அறிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சுரேஷ் சலேயின் கைதைத் தொடர்ந்து, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சில முக்கிய மற்றும் பலம்வாய்ந்த நபர்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது வலைவீசியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

42 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0