உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக வீதியை செப்பனிடும் நடவடிக்கையில் அதிகாரிகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மன்னார் தபாலகத்தில் இருந்து சௌத்பார் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், குறித்த வீதியை புனரமைப்பு செய்ய பல தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) மன்னாரிற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த வீதியில் காணப்படுகின்ற குன்றும் குழியையும் செப்பனிடும் பணியை உரிய திணைக்களத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் பிரதான தபாலகத்தில் இருந்து சௌத்பார் புகையிரத பகுதிக்குச் செல்லும் குறித்த வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டது.

எனினும் குறித்த வீதியை முழுமையாக அபிவிருத்தியை முன்னெடுக்க உரிய திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இவ்விடயம் தொடர்பாக குறித்த வீதிக்கு பொறுப்பான திணைக்களத்திடம் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.

எனினும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் குறித்த வீதியூடாக மழைக்காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மன்னார் நகரின் முக்கியமான குறித்த பிரதான வீதி தொடர்பாக யாரும் அக்கறை கொள்ளவில்லை.

இந்த நிலையில் மன்னாரில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள காற்றாலை மின்கோபுர திறப்பு விழா மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற உள்ள நிலையில் ஜனாதிபதி குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் வருகையையொட்டி தற்போது குறித்த வீதியில் காணப்படுகின்ற பாரிய குழிகளை நிரப்பி செப்பனிடும் பணியை உரிய திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0