உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கிய போது பல கோடி மோசடி அம்பலம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
75 பார்வைகள்

மன்னார் நகர சபையினால் கடந்த கால தலைமைத்துவத்தின் கீழ் சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கிய போது பல்வேறு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இன்றைய தினம் வியாழக்கிழமை தேசிய கணக்காய்வு அலுவலக பிரதிநிதிகள் மன்னாரிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த கால தலைமைத்துவத்தின் கீழ் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கி போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மன்னார் நகர சபைக்கு 5 கோடியே 31 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலதிக நடவடிக்கைகளுக்கு இன்றைய தினம் மன்னாரிற்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் மன்னார் நகர சபைக்குச் சென்று நகர சபைத் தலைவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவரின் நெருங்கிய உறவினர்களிடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மேலும் 10 இலட்சம் ரூபாய் நகர சபைக்கு வருமானம் இழப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளை குறித்த அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

59 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

68 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

75 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

57 0 0