உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

எண்ணெயைத் தொட்டால்… வெனிசுலா விவகாரத்தில் ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
58 பார்வைகள்

நிக்கோலஸ் மதுவை அமெரிக்க இராணுவம் கைது செய்ததன் பின்னர், வெனிசுலாவை நிர்வகிக்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா எண்ணெய் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது என சீனா வலியுறுத்தியுள்ளது.நியூயார்க் நகர நீதிமன்றத்தில் மதுரோவும் அவரது மனைவியும் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையிலேயே சீனாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.வெனிசுலாவில் உள்ள மிகப்பெரிய மற்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களின் மீது கட்டுப்பாடு செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் இனி வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை நிர்வாகம் செய்வார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், வெனிசுலாவின் எண்ணெய் தொழிலில் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, அந்த நாட்டிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வது தொடர்பாக கராகஸுடன் தங்களுக்கு உள்ள ஒப்பந்தங்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ளது.

வெனிசுலாவின் நட்பு நாடான சீனா, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.மட்டுமின்றி, இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டம், சர்வதேச உறவுகளில் உள்ள அடிப்படை நெறிமுறைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அப்பட்டமான மீறல் என்றும் சீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், வெனிசுலா கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள், அமெரிக்கப் படைகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் நாட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது.

சாவேஸின் கீழ் வெனிசுலா மற்றும் சீனாவின் உறவு வலுப்பெற்றது, மேலும் அவர் லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் மிக நெருங்கிய கூட்டாளியாக ஆனார். 2013-ல் சாவேஸ் இறந்த பிறகு, மதுரோ நாட்டின் ஜனாதிபதியான பின்னரும் இந்த நெருங்கிய உறவு தொடர்ந்தது.மேலும், 2016-ல் மதுரோ தனது மகனை உயர்தரமிக்க பெக்கிங் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார்.

அதற்குப் பதிலாக, சீனா வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் பெருமளவு பணத்தை முதலீடு செய்தது.2017 முதல் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தடைகளை கடுமையாக்கியபோது, இது வெனிசுலாவுக்கு ஒரு பொருளாதார உயிர்நாடியாக அமைந்தது.வெளியாகியுள்ள தரவுகளில் அடிப்படையில், சீனா 2024 ஆம் ஆண்டில் வெனிசுலாவில் இருந்து சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளது. இந்த நிலையிலேயே, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைத் தொட வேண்டாம் என சீனா பகிரங்கமாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

19 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

49 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

61 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

46 0 0