யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் கடமையேற்பு!
யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட திரு. காசிநாதன் சசிகரன் அவர்கள் இன்றையதினம் (21.09.2026) காலை 08.30 மணியளவில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இதற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.