உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்க! : முன்னாள் எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
82 பார்வைகள்

“மன்னிப்பையும் சகிப்புத் தன்மையையுமே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. மதங்களின் உண்மையான கோட்பாட்டை மதித்து சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கல்முனையை வதிவிடமாகக் கொண்ட சிவராசா அனோஜன் என்ற இளைஞர் தனது சமூக வலைதளத்தில் இஸ்லாமிய மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக ஓரிரு வசனங்களை எழுதினார் என்ற காரணத்துக்காக சவூதி அரேபிய நீதித்துறையால் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் என்பவருக்குச் சவூதி அரேபியாவின் சட்ட திட்டங்கள் தெரியாத நிலயில், தான் எழுதுகின்ற எழுத்தில் ஒரு மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்று தெரியாத நிலையில், அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளிப்பது என்பதை ஒரு மனிதாபிமான செயலாகக் கருத முடியாது.

அவர் எழுதியது தவறு என்று அறிந்தவுடன் தனது சமூக வலைதளத்திலிருந்து அதனை அகற்றியது மாத்திரமல்லாமல், அதற்காகப் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார். இந்தநிலையில், அவரது அறியாமையால் செய்த சிறிய தவறுக்கு மரணதண்டனைதான் தீர்ப்பா என்ற கேள்வி எழுகின்றது.

சகல மதங்களுமே அன்பையும் சகிப்புத் தன்மையையுமே போதிக்கின்றன. அறியாமல், தெரியாமல் செய்த தவறுகள் மன்னிக்கப்பட வேண்டுமென்று கூறுகின்றன.

இவை அனைத்தையும் சவூதி நீதித்துறை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். காசாவில் நிகழ்ந்து வரும் இனப் படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த உலக மக்களும் மொழி, மதம், இனம் கடந்து இத்தகைய மோசமான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு ஒருவரும் இல்லையா? இதனைத் தடுத்து நிறுத்த முடியாதா? என்று தொடர்ந்தும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றோம்.

அவர்களது மொழி, மதம் பற்றி நாங்கள் யாரும் சிந்தித்ததில்லை. அவர்கள் மனிதர்கள், தனது சொந்த மண்ணில் வாழும் உரித்துடையவர்கள். அவர்களை அழித்தொழிப்பதற்கு யாருக்கும் உரித்தில்லை என்பதை இன்னமும் திடமாக நம்புகின்றோம்.

அவ்வாறுதான் உலக மனிதகுலம் இருப்பதாக நம்புகின்றோம். இத்தகைய ஒரு சூழ்நிலையில், ஒரு சிறிய தவறுக்காக, மரண தண்டனை விதிப்பதென்பது நியாயமானதா?

அந்த இளைஞரின் பெற்றோர் தமது வாழ்வுக்காக அவரை நம்பியுள்ளனர். அவர் இல்லாவிட்டால் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்படும்.

சட்டங்களும் தண்டனைகளும் ஒரு மனிதனை திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். அவரை இல்லாமல் செய்வதால் குற்றங்கள் குறைந்துவிடாது.

எனவே, இலங்கை ஜனாதிபதியும் இலங்கை அரசும் சவூதி அரேபிய அதிகாரிகளுடனும், அந்த நாட்டு மன்னருடனும் இராஜதந்திர ரீதியில் பேச்சுகளை நடத்தி, அந்த இளைஞரை மரணதண்டனையிலிருந்தும் ஏனைய பொருளாதார தண்டனையிலிருந்தும் காப்பாற்றி மனிதாபிமானத்தை நிலைநிறுத்த முன்வர வேண்டும்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

117 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

152 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0