உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

யாழில் பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உ**யிரிழந்த இளைஞன்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
24 பார்வைகள்

இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற உந்துருளியை வழிமறித்த வேளை, உந்துருளியில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்தனர்.

இதன்போது குறித்த இளைஞர் உந்துருளியை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அந்த இடத்திலேயே அசைவற்று காணப்பட்டார்.

அதன்பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன், நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இந்த விடயத்தை…

23 0 0
இலங்கை செய்திகள்

பசிலைக் கண்டறிய சர்வதேச பொலிஸாரின் நீல அறிவித்தல்.!

மாத்தறை பிரவுன்ஸ்ஹில் காணி கொள்வனவு மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல் காலப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி 12 ஆயிரம்…

12 0 0
இலங்கை செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி.!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.…

11 0 0
இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ**லை.!

அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹல்தோட்டை பகுதியைச்…

6 0 0