உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

சவூதித் தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்!

22 பார்வைகள்

சவூதி அரேபியாவில் சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துக்கு இன்று சென்று அவசர மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை – நற்பிட்டிமுனையில் இருந்து வருகை தந்த அனோஜனின் குடும்பத்தினருடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

தூதரக அதிகாரிகளிடம் அனோஜனின் தாயாரும் குடும்பத்தினரும் கதறி அழுதபடி மனுவைக் கையளித்ததுடன், மனிதநேய அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கி தாய்நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.

தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்று ஒன்பது மாதங்களேயான நிலையில், சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட மதம் சார்ந்த கருத்து தொடர்பாக அனோஜன் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் சவூதி நீதிமன்றத்தால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின்போது அந்தத் தண்டனை திடீரென மரணதண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றன.

தீர்ப்பு தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்து ஆவணங்கள் கிடைத்தவுடன், 30 நாள்களுக்குள் சவூதி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் ஆயத்தமாக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பல பாகங்களிலும் அனோஜனை விடுவிக்கக் கோரி கவனவீர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில், அரசு உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டு அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

24 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திரகுமார் கைது

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திர குமார், நிதி மோசடி மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று…

40 0 0
இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய…

9 0 0